சுடிதாரை மாற்றித் தராத ஜவுளிக்கடைக்கு ரூ.20,000 அபராதம்

ஜவுளிக்கடைக்கு சென்று தான் எடுத்த சுடிதாரை மாற்றித் தருமாறு சிறுமி கோரியுள்ளார். ஆனால், கடைக்காரர்கள் சுடிதாரை மாற்றித் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்


நெல்லை: அளவு சரியில்லாத சுடிதாரை மாற்றித் தராத ஜவுளிக்கடைக்கு ரூ.20,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம்தான் முதன்மையான விஷயம். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை உடுத்தி பட்டாசு வெடிப்பது வழக்கம்.

தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை எடுக்க மக்கள் அலைமோதுவதால் ஜவுளிக்கடைகளில் கூட்டம் களைகட்டும். அந்த வகையில், தீபாவளிப் பண்டிகைக்காக நெல்லையை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், ஜவுளி கடையில் அனார்கலி ரக ஆடை எடுத்துள்ளார்.