தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவரை கூட்டு பலாத்காரம் செய்து தீயிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகியுள்ள நான்கு பேருக்கு உச்ச கட்ட தண்டனை கொடுக்குமாறு பெண்ணின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைதராபாத் : கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள பெண் கால்நடை மருத்துவருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் புரட்சி தளமாக மாறியுள்ளன.
கடந்த புதன்கிழமை ஷம்சபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலை நிமித்தமாக புறப்பட்ட இளம்பெண் கட்டபள்ளி பாலத்திற்கு கீழ் எறிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண் வாகனத்தை ஓட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள், புதன்கிழமை இரவு 9 மணிக்கு அவரின் தொலைபேசி உரையாடலும் முக்கிய ஆதாரமாக இருந்தன.